¡Sorpréndeme!

ட்விட்டரை விட்டு ஓடிய நடிகை!

2018-02-08 7,912 Dailymotion

தெலுங்கு சின்னத்திரையில் மிக பிரபலமான நடிகையாக இருப்பவர் அனசுயா பரத்வாஜ். அவர் தன்னுடன் செல்ஃபி எடுக்கவந்த ரசிகர் ஒருவரின் போனை வாங்கி உடைத்தது பெரிய சர்ச்சையாகியுள்ளது. பிரபல நடிகையாக இருக்கும் நடிகை அனுசுயா பல தெலுங்கு படங்களில் சிறு சிறு வேடங்களிலும் நடித்துள்ளார். இவர்தான் ரசிகரின் போனை வாங்கி உடைத்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சமீபத்தில் நடிகை அனசுயா பரத்வாஜ் தன் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு வரும்போது ஒரு இளம் ரசிகர் அவரை செல்பி எடுக்க அணுகினார். ஆனால் அதை விரும்பாத அனசுயா அவர் கையில் இருந்த போனை வாங்கி கீழே வீசி உடைத்துள்ளார். இந்தச் செய்தி வைரலானதும் சமூக வலைதளங்களில் பலரும் அந்த நடிகையை விமர்சித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். முதலில் அனசுயா பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கொந்தளித்தனர். அவர்களுக்கு பதில் கூற முடியாமல் அனசுயா தன் ட்விட்டர் மற்றும் முகநூல் கணக்கை டெலிட் செய்துவிட்டார். இது ஒருபுறமிருக்க நடிகை அனசுயா தன் போனை உடைந்துவிட்டதாக பாதிக்கப்பட்ட ரசிகர் காவல் நிலையத்தல் புகார் அளித்துள்ளார்.


Anasuya Bharadwaj is the most popular actress in Telugu cinema. Recently A young fan approached anasuya to take selfie, But Anasuya, who did not like it, bought the phone from his hand and threw it down.