¡Sorpréndeme!

பல்கலைகழகங்களில் ஆய்வு குழு…வீடியோ

2018-02-06 34 Dailymotion

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைகழகத்திலும் மோசடிகள் நடந்துள்ளதா என்பது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளன

பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் கணபதி உதயகுமார் என்ற உதவி பேராசிரியரிடம் போராசிரியர் பணிக்கு 30 லட்சம் ருபாய் லஞ்சமாக பெற்றுள்ளார் . இது குறித்து ஆய்வு நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் துணைவேந்தர் கணபதி அறையில் ஆய்வு நடத்திய போது கணபதி லஞ்சம் வாங்கியதற்கான ஆதராங்களை கைப்பற்றி வரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .இது குறித்து கருத்து தெரிவித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தவறு செய்தது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்றும் தெரிவித்தார்

இந்நிலையில் சேலம் பெரியார் பல்கலை கழகத்தில் உதவி பேராசியர் பதிவுக்கு லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைகழகத்திலும் மோசடிகள் நடந்துள்ளதா என்பது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளன மேலும் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர் . இந்நிலையில் துணைவேந்தர் கணபதி மற்றும் தர்மராஜ் சார்பில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது . மனுவை விசாரித்த நீதிபதி வழக்கை 8 ஆம் தேதி ஒத்திவைத்துடன் அரசு தரப்பில் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்