¡Sorpréndeme!

3 ஆவது போட்டியிலும் இந்தியாவின் வெற்றி தொடருமா?- வீடியோ

2018-02-06 444 Dailymotion

முதல் இரண்டு ஒருதினப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, கேப்டவுனில் 7ம் தேதி நடக்கும் மூன்றாவது போட்டியில் விளையாட உள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு உள்ள கேப்டவுனில் தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய அணி தண்ணி காட்டும் என்று எதிர்பார்க்கலாம். தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

தற்போது 6 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. டர்பன் மற்றும் சென்சூரியனில் நடந்த முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்தியா அபாரமாக வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், மூன்றாவது ஒருதினப் போட்டி 7ம் தேதி கேப்டவுனில் நடக்கிறது. கடும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள கேப்டவுனில், ரேஷன் முறையில்தான் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.

india vs south africa 3rd odi held on tomorrow

india vs south africa 3rd odi | Game analysis | Oneindia Tamil Sports | Sports News