டெல்லியில் சமீப காலமாக அதிகமான குற்றச்சம்பவங்கள் நடக்கிறது. கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வன்புணர்வு என வரிசையாக ஏதாவது நடந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இரண்டு வாரம் முன்பு அங்கு நடந்த கடத்தல் ஒன்றில் தற்போது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். டெல்லி போலீஸ் மிகவும் திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். அந்த சிறுவன் பள்ளி பேருந்தில் இருந்த போது எல்லோருக்கும் முன் கடத்தப்பட்டு இருக்கிறான். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கடத்தல் கடந்த ஜனவரி 25ம் தேதி நடந்து இருக்கிறது. அங்கு சென்று பள்ளி பேருந்து ஒன்றை இருவர் பைக்கில் வந்து மறைத்துள்ளனர். துப்பாக்கி மூலம் டிரைவரை மிரட்டி பின் அங்கு இருந்த ஐந்து வயது சிறுவனை கடத்தி சென்று இருக்கிறார்கள். டிரைவரை பின் தாக்கி உள்ளனர்.