¡Sorpréndeme!

18,000 கி.மீ. நீளத்துக்கு புதிய இரட்டை ரயில் பாதைகள்- ஜேட்லி- வீடியோ

2018-02-01 1 Dailymotion

பிட்காய்ன் உள்ளிட்ட ஆன்லைன் கரென்சிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜேட்லி தெரிவித்தார். பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றாகும். ஆனால் இவற்றை நாம் இணையதளத்தில் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். இதுபோன்று ஆயிரத்துக்கும் அதிகமான கரன்சிகள் உள்ளன. இந்தியாவில் ஒரு பிட்காயினின் ரூ.15 லட்சமாகும். இதன் மதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த பிட்காயினை பணம் கொடுத்தும் பங்குகளை விற்றும் வாங்கிக் கொள்ளலாம். தங்கத்துக்கு மாற்றாக இதை வாங்கிக் கொள்ளலாம்.
இதற்கென வரி விதிப்பு முறையோ வங்கி கட்டுப்பாடுகளோ கிடையாது. அதனால் இதை அனைவரும் வாங்கி வருகின்றனர்.

இதுதொடர்பாக கடந்த குளிர்கால கூட்டத்தொடரின்போதும் கேள்வி எழுப்பப்பட்டது. இதை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதுகுறித்து பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

Bitcoin and any kind of crypto currency are not considered as legitimate. Government will take steps to eradicate that type of currencies, says FM Arun Jaitley.