¡Sorpréndeme!

பழனியில் தைப்பூச திருவிழா கோலாகல கொண்டாட்டம்....வீடியோ

2018-01-31 1 Dailymotion

பழனியில் தைப்பூச திருவிழாவையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து கொண்டு பழனி உள்ளிட்ட அறுபடை வீடுகளுக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. தைப்பூசம் திருநாளன்று முருகன் கோயில்களுக்கு பக்தர்கள் காவடி எடுத்து செல்வது வழக்கம்.அதன்படி அறுபடை வீடுகளிலும் தமிழகம் முழுவதிலுமுள்ள முருகன் கோயில்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதற்காக பழனியில் கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிலிருந்து 7-ஆம் நாளான இன்று தைப்பூசம் என்பதால் தேரோட்டம் நடைபெறுகிறது. இதனால் பழனியில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று மட்டும் 6 லட்சம் பேர் முருகனை தரிசனம் செய்துள்ளனர். அந்த எண்ணிக்கை இன்று மேலும் அதிகரிக்கக் கூடும்.

Thai poosam in Murugan temples celebrated. Palani Murugan temple after 60 years, Therottam takes place in the morning because of Moon Eclipse.