லண்டனை சேர்ந்த பிரபல அருங்காட்சியகமான மேடம் டுசாட் மியூசியம், உலகளவில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களின் மெழுகு சிலைகளை உருவாக்கி அருங்காட்சியகத்தில் வைத்துள்ளது. இதன் கிளைகள் பல்வேறு நாடுகளில் உள்ளன. சிங்கப்பூரிலும் இந்த அருங்காட்சியகத்தின் கிளை உள்ளது. Loading ad பாலிவுட்டின் பிரபல நடிகையான கஜோலுக்கு சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட் அருங்காட்சியத்தில் மெழுகு சிலை அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக இந்த குழுவைச் சேர்ந்தவர்கள், மும்பை வந்து கஜோலின் முகத்தோற்றம், கண், முடி உள்ளிட்டவைகளை அளவிட்டுச் சென்று உள்ளனர். மெழுகு சிலை அமைப்பது குறித்து கஜோல் கூறுகையில், "என் மெழுகுச் சிலையை காண ஆவலாக உள்ளேன். என் சிலையை உருவாக்க தேவையான அளவீடுகளை சுமார் 4 மணிநேரம் செலவிட்டு எடுத்து சென்றனர். சிலை உருவாக்கப் பணிகள் முடிந்து, சிங்கப்பூரில் என் சிலை வைக்கப்படும் நாளை எண்ணி காத்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார். முன்னாள் ஆபாசப் பட நடிகையும், பாலிவுட் முன்னணி நடிகையுமான சன்னி லியோனுக்கு டெல்லியில் மெழுகு சிலை நிறுவப்பட இருக்கிறது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கெனவே அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், சச்சின் என பல பிரபலங்களின் சிலை இங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Bollywood actress Kajol's wax statue is to set up in Madame Tussauds Museum, Singapore.