¡Sorpréndeme!

சக்களத்தியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய பெண் தாதா கைது- வீடியோ

2018-01-30 6 Dailymotion

புதுவையில் கணவரை கொன்றவர்களை பழி வாங்க ஹோட்டலில் ரூம் போட்டு சதி திட்டம் தீட்டிய புதுவை பெண் தாதா எழிலரசி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். காரைக்காலை அடுத்த திருபட்டினத்தைச் சேர்ந்தவர் ராமு. சாராய வியாபாரியாக இருந்தார். பின்னர் இவர் கட்டுமானத் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி வினோதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எழிலரசி என்பவரை 2-ஆவதாக திருமணம் செய்து கொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த வினோதா ராமுவையும் எழிலரசியையும் கொல்ல திட்டமிட்டார். கடந்த 2013-ஆம் ஆண்டு காரைக்காலில் பைக்கில் சென்றபோது ராமுவையும், எழிலரசியையும் கூலிப்படை வைத்து கொல்ல திட்டமிட்டார். அதன்படி கூலிப்படையினர் வெட்டியதில் ராமு இறந்துவிட்டார். ஆனால் எழிலரசி மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார்.

கணவரை கொலை செய்தவர்களை பழி வாங்க திட்டமிட்டார் எழிலரசி. இதை அறிந்த வினோதா தனது உயிருக்கு ஆபத்து என்பதால் வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டார். கடந்த 2014-ஆம் ஆண்டு காரைக்காலில் இருந்து சென்னைக்கு வினோதா காரில் சென்றபோது சீர்காழி அருகே வழிமறிக்கப்பட்டு வெட்டி கொல்லப்பட்டார். இது தொடர்பாக எழிலரசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.