தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நானி. இவர் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். ராஜமௌலியின் இயக்கத்தில் வெளிவந்த 'நான் ஈ', 'ஆஹா கல்யாணம்' ஆகிய தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார். தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கும் நானி ரெஜினா நடிக்கும் 'அவ்' படத்தைத் தயாரித்து வருகிறார். சமீப காலமாக தெலுங்கில் ஹிட் படங்கள் கொடுத்து வரும் அவர் நேற்று சாலை விபத்தில் சிக்கியுள்ளார். ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த நானியின் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் நானியின் முகம் மற்றும் மூக்கில் அடிபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரது டிரைவரும் சிறு சிறு காயங்களோடு தப்பியுள்ளார். நானி தற்போது 'கிருஷ்ணார்ஜுன யுத்தம்' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தச் செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள் நானியின் உடல்நலம், காயம் குறித்து விசாரித்து வந்தனர். தேவையற்ற வதந்திகளைத் தவிர்ப்பதற்காக அவரே ட்விட்டரில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.