¡Sorpréndeme!

ஊட்டியை போல சென்னையை மாற்றிய பனிமூட்டம்.. திருப்பி விடப்பட்ட விமானங்கள்

2018-01-26 637 Dailymotion

கடுமையான பனி மூட்டம் காரணமாக சென்னைக்கு வரும் விமானங்கள் பெங்களூருவிற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

சென்னையில் இன்று வழக்கத்தைவிட பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது. முகப்பு விளக்குகளை எரியவிட்டபடிதான் காலை நேரத்தில் வாகன ஓட்டிகளால் பயணிக்க முடிந்தது.

ஊட்டி, கொடைக்கானலை போல சென்னையின் தோற்றத்தை மாற்றியது இந்த பனி மூட்டம். கடந்த போகி பண்டிகையன்று கடுமையான பனி மூட்டம் மற்றும் புகை காரணமாக பல விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியவில்லை.

இன்றும் பனிமூட்டத்தால் பல விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. கோலாலம்பூர், கொச்சி, மொரீசியசிலிருந்து சென்னை வந்த விமானங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஹைதராபாத்திலிருந்து வந்த விமானம் மீண்டும் ஹைதராபாத்திற்கே திருப்பியனுப்பப்பட்டது. சார்ஜாவிலிருந்து சென்னை வந்த விமானம், திருவனந்தபுரத்திற்கு அனுப்பப்பட்டது. இதனால் விமான பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். வாகன ஓட்டிகளும் நிதானமாகவே வாகனங்களை இயக்கினர்.


The flights which are coming to Chennai have been diverted to Bangalore due to heavy mist. Flights from Kuala Lumpur, Kochi and Mauritius to Chennai were sent to Bangalore.