¡Sorpréndeme!

ராகுல் ப்ரீத் சிங்குக்கு ரெக்கமண்ட் பண்ண காஜல் அகர்வால்..வீடியோ

2018-01-24 1,218 Dailymotion

ரகுல் ப்ரீத் சிங்கால் மறக்க முடியாத ஒரு காரியத்தை செய்துள்ளார் காஜல் அகர்வால்.
காஜல் அகர்வாலும் சரி, ரகுல் ப்ரீத் சிங்கும் சரி கோலிவுட், டோலிவுட், பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்கள். கோலிவுட், டோலிவுட் படங்களில் இருவரும் பிசியாக உள்ளனர். இந்நிலையில் காஜல் ஒரு காரியம் செய்துள்ளார். ஸ்ரீராம் ஆதித்யாவின் இயக்கத்தில் நானி, நாகர்ஜுனா நடிக்கும் படத்தில் காஜல் அகர்வாலை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தனர். இது குறித்து காஜலிடம் பேசியும் உள்ளனர். காஜலும், நானியும் நல்ல நண்பர்கள். தான் பிற படங்களில் பிசியாக இருப்பதால் நண்பன் நானியின் படத்தில் நடிக்க முடியாது என்று காஜல் இயக்குனர் ஸ்ரீராமிடம் தெரிவித்துள்ளார்.
டோலிவுட் ஹீரோக்களுக்கு பிடித்த நடிகை காஜல் தான். சமத்து ஹீரோயின் என்று ஹீரோக்களால் அழைக்கப்படுகிறார். ஹீரோக்கள் ஷூட்டிங்கிற்கு லேட்டாக வந்தால் கோபம் அடையாமல் பொறுமையாக காத்திருந்து நடித்துக் கொடுப்பாராம் காஜல்.

Actress Kajal Agarwal has won the hearts of Tollywood celebrities by referring Rakul Preet Singh for a movie that came to her. Rakul Preet Singh has happily accepted the offer.