டாவோஸில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
உலக பொருளாதார மாநாடு சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கிறிஸ்டல் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மேலும் ஹாலிவுட் நடிகை கேட் பிளான்செட், பாடகர் எல்டன் ஜானுக்கும் விருது வழங்கப்பட்டது.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை, தொழிற்பயிற்சி அளிப்பதுடன் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவி செய்து வருகிறார் ஷாருக்கான். உலக பொருளாதார மாநாட்டில் வழங்கப்படும் கிறிஸ்டல் விருதை முன்னதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஷபானா ஆஸ்மி, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், ரவி சங்கர், அம்ஜத் அலி கான் ஆகிய இந்தியர்கள் பெற்றுள்ளனர்.
Bollywood actor Shah Rukh Khan is honoured with Crystal award at the World Economic Forum being held in Davos, Switzerland. Hollywood actress Cate Blanchett and Singer Elton John are also honoured in the Forum.