¡Sorpréndeme!

கார்ப்பரேட் விவசாயம் பற்றிப் பேசும் விஜய்- வீடியோ

2018-01-23 807 Dailymotion

விஜய்யின் 62-வது திரைப்படம் முருகதாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் சென்னையில் தொடங்கியுள்ளது. 'கத்தி' படத்தைப் போல இப்போதும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட கதையைத்தான் படமாக்குகிறார் முருகதாஸ். 'விஜய் 62' படத்தின் கதை தொடர்பான தகவல்கள் கசிந்திருக்கின்றன. இப்படத்தில், கார்ப்பரேட்டுகளின் பிடியில் விவசாயம் இருப்பதை சுட்டிக்காட்ட இருக்கிறாராம் விஜய். விஜய்யை வைத்து 'துப்பாக்கி', 'கத்தி' ஆகிய படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யின் 62-வது படத்தை தற்போது இயக்கி வருகிறார். துப்பாக்கி படத்தில் ராணுவ வீரரைப்பற்றிய கதையை படமாக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், கத்தியில் விவசாயிகள் பிரச்னையை படமாக்கினார். 'தளபதி 62' படத்தை இந்த ஆண்டு தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் 'வனமகன்' சாயிஷா சைகல் இணையவிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. வெகு விரைவில் படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.


AR Murugadoss is filming the story about farmers in 'Vijay 62' movie like 'Kaththi'. Agricluture is the main story of 'Thalapathy 62' movie. In addition to the farmers issue in this film, the farmers are not aware of the fact that they are producing poisonous food for human beings.