தமிழகம் முழுக்க கந்து வட்டி கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. ஆனால் உத்தர பிரதேச மாநிலத்தில் அரசு அனுமதி பெற்ற பைனான்சிங் நிறுவனங்களே நிறையே மோசடிகளை செய்து வருகிறது.
அந்த நிறுவனங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட அங்கு கட்டப்பஞ்சாயத்து நடத்திக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் நேற்று ஒரு லக்னோ விவசாயி இதனால் மரணம் அடைந்து இருக்கிறார்.
பைனான்ஸ் அதிகாரிகளே அவரை டிராக்டர் ஏற்றி கொலை செய்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து அந்த குடும்பம் பரபரப்பு வாக்குமூலம் அளித்து இருக்கிறது.கயான் சந்திரா என்ற அந்த விவசாயி குடும்பத்தில் மொத்தம் ஏழு பேர் இருக்கிறார்கள். இவருக்கு 2.5 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஏழு பேரில் ஐந்து பேர் பெண்கள் குழந்தைகள். அதில் ஒருவர் வாய் பேச முடியாதவர். கடந்த பல வருடங்களாக வறுமையில் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள்.
அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டிராக்டர் வாங்க லோன் எடுத்து இருக்கிறார். 1.25 லட்சம் பணத்தை இவருக்கு தனியார் பைனான்சிங் நிறுவனம் ஒன்று கொடுத்து இருக்கிறது. அதை வைத்து டிராக்டர் வாங்கி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் கடனில் 35 ஆயிரம் ரூபாய் அடைத்தும் இருக்கிறார்.