¡Sorpréndeme!

மீண்டும் ஆசிரியர்கள் போராட்டம்

2018-01-20 39 Dailymotion

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் கடந்த 7 ஆண்டுகளாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். அரசு தரப்பில் தீர்வு காணாததால் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜாக்டோ-ஜியோவினர் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்தனர். இதையடுத்து, தமிழக முதல்வர் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதற்கு பிறகு ஜாக்டோ-ஜியோ அமைப்பு இரண்டாக பிரிந்தது. ஜாக்டோ-ஜியோ கிராப் என்ற புதிய அமைப்பை தொடங்கினர். இந்த அமைப்பில் சுமார் 28 அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் இணைந்துள்ளன. தற்போது இந்த அமைப்பினர் இன்று மாநிலம் தழுவிய உண்ணா விரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து, ஜாக்டோ-ஜியோ கிராப் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகராஜன், இளங்கோவன், பி.கே.இளமாறன் ஆகியோர் கூறியதாவது: பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நீண்டநாளாக நாங்கள் கேட்டு வருகிறோம். இது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரமானது.

teachers protest in chennai