¡Sorpréndeme!

'டிக் டிக் டிக்' படத்தை சமீபத்தில் பார்த்த தணிக்கைக் குழுவினர் எந்த கத்திரியும் போடவில்லை.

2018-01-17 762 Dailymotion

மிருதன் படத்தை அடுத்து 'ஜெயம்' ரவியுடன் சக்தி சௌந்தர்ராஜன் இணைந்துள்ள படம் 'டிக் டிக் டிக்'. 'நாய்கள் ஜாக்கிரதை', 'மிருதன்' படங்களைத் தொடர்ந்து சக்தி சௌந்தர்ராஜன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படம் இந்தியாவின் முதன் விண்வெளி திரைப்படம் என்று கூறப்படுகிறது. டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில் 'ஜெயம்' ரவிக்கு ஜோடியாக , நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். நேமிசந்த் ஜபக் தயாரித்துள்ள 'டிக் டிக் டிக்' படத்தை சமீபத்தில் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்துக்கு எந்த கத்திரியும் போடவில்லை. அனைத்து தரப்பினரும் பார்க்கக் கூடிய படம் என்று 'டிக் டிக் டிக்' படத்திற்கு 'யு' சான்றிதழும் வழங்கியுள்ளது சென்சார் போர்டு. குடியரசு தினத்தை முன்னிட்டு 'டிக் டிக் டிக்' படம் வருகிற 26-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவினால் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார் 'ஜெயம்' ரவி. அதனால் 'டிக் டிக் டிக்' படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் கூட அவரால் முழுமையாக ஈடுபட முடியவில்லை. இருந்தாலும் இன்று அவர் பத்திரிகையாளர்களைச் சந்திக்க உள்ளார். ஜனவரி 26-ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.

Jayam Ravi's 'Tik Tik Tik' film is directed by Shakti Soundarrajan. This film is said to be India's first space film. Sensor board has issued 'U' certificate for 'Tik Tik Tik' film. 'Tik Tik Tik' will be released on Jan 26th.