¡Sorpréndeme!

கோவா பீச்சில் பிணமாகக் கிடந்த வாரிசு நடிகர்: திரையுலகினர் அதிர்ச்சி

2018-01-16 31,902 Dailymotion

பிரபல மலையாள பட தயாரிப்பாளரின் மகனும், நடிகருமான சித்து ஆர். பிள்ளை கோவா கடற்கரையில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பிரபல மலையாள பட தயாரிப்பாளர் பி.கே.ஆர். பிள்ளையின் மகன் சித்து. வயது 27. அவர் கடந்த 2012ம் ஆண்டு வெளியான துல்கர் சல்மானின் செகண்ட் ஷோ படம் மூலம் நடிகராக பிரபலம் ஆனார். சித்து கடந்த 12ம் தேதி கோவா சென்றுள்ளார். கோவா சென்ற சித்து அங்குள்ள கடற்கரை ஒன்றில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்தது சித்து தான் என்பதை அவரின் தாய் உறுதிபடுத்தியுள்ளார்.