ஜிஎஸ்டி வரியானது எதிர்பார்த்ததை விட கூடுதலான இலக்கை எட்டி உள்ளது. எனவே இதுவும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு கூடுதல் சந்தோசத்தை அளித்துள்ளது. எனவே இந்த பட்ஜெட்டில் தான் செயல்படுத்த நினைத்த மாற்றங்களை கண்டிப்பாக செயல்படுத்துவார் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு இன்னும் இரு வாரங்களே உள்ளன. பட்ஜெட் பற்றிய காய்ச்சல் மண்டை வலியானது இப்போதே பாமரன் முதல் கோடீஸ்வர் வரையிலும், சாதாரண பெட்டிக்கடைக்காரர் முதல் பெரும் தொழில் நிறுவனங்கள் வரையிலும் ஆட்டிப்படைக்க ஆரம்பித்து விட்டது.
சில தொலைக்காட்சி ஊடகங்களும் இப்போதே பட்ஜெட் பற்றிய விவாதாங்களை ஆரம்பித்துவிட்டன. தெருமுனை டீக்கடையில் உட்கார்ந்து கொண்டு டீ குடிப்பவர்கள்கூட இந்த வருட பட்ஜெட்டில் டீக்கு வரியை ஏத்துவாய்ங்களோ இல்லை தம்முக்கு வரியை எறக்குவாய்ங்களோ என்று டெல்லி லெவலுக்கு இவர்களும் விவாதிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
இவர்கள் இப்படி இருக்க, மாதச் சம்பளம் வாங்குபவர்களோ, ஐயையோ பட்ஜெட் வரப்போகுதோ, இந்த பட்ஜெட்டில் 80சி வரி விலக்கு பிரிவில் ஒன்றரை லட்சத்துக்கு பதில் இரண்டு லட்சமா ஆக்குவாய்ங்களோ, வரி விலக்கு உச்ச வரம்பை இரண்டரை லட்சத்துக்கு பதில் நான்கு லட்சமா கூட்டுவாய்ங்களோ என்று விவாதிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
Union Finance Minister happy mood for GST collection and advance tax for the year 2017 -18 have toched in two third of the expected revenue collection.