ரஜினி, கமல் இருவரும் மதியம் 3.30க்கு மைதானத்துக்குள் ஹெலிகாப்டரில் வந்து ராஜ கம்பீரத்துடன் இறங்கினார்கள். 3.30 மணியில் இருந்து நிகழ்ச்சி முடிவடைந்த 12 மணி வரை சுமார் 9 மணி நேரம் தங்களது பங்களிப்பைத் தந்தனர். விஜய், அஜித் இருவரும் விழாவுக்கு வரவில்லை. நயன்தாரா, அனுஷ்கா, த்ரிஷா, அமலாபால், ஹன்சிகா போன்ற முன்னணி நடிகைகளும் மிஸ்ஸிங். ரஜினி, கமலே வரும்போதே உங்களுக்கென்ன? என்று கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என சங்க நிர்வாகிகளை உறுப்பினர்கள் வற்புறுத்த ஆரம்பித்துள்ளனர்.