தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்து பணிமனைகளில் அமைச்சர்கள் பேருந்துகள் தங்குதடையின்றி இயக்குவதற்கான நடவடிக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் குறைந்த அளவே அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஒருசில மாவட்டங்களில் தற்காலிக பணியாளர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை நகரில் தினக்கூலி அடிப்படையில் ஓட்டுனர்கள் நடத்துனர்கள் பணியமர்தப்பட்டும் தனியார் பேருந்துகளை கொண்டும் பொதுமக்களின் சிரமத்தை தவிர்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் பேருந்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவது குறித்தும் பேருந்துகளை தற்காலிக பணியாளர்கள் கொண்டு இயக்கப்படுகிறதா என்று தமிழக அமைச்சர்கள் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு நடத்தினர்.
Des : In all bus services in Tamilnadu, ministries have been conducting inspections on buses to run without buses.