¡Sorpréndeme!

அதிகாரிகளை முற்றுகையிட்டவர்கள் கைதால் பரபரப்பு- வீடியோ

2018-01-05 98 Dailymotion


உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வார்டுகள் மறு சீரமைப்பு செய்யும் போது பல்வேறு குளபடிகளை ஏற்படுத்தி வரும் அரசு அதிகாரிகளிடம் பொதுமக்களும் கட்சியினரும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு…

வேலூர் மாவட்டம் லாலாபேட்டை பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு மறு சீரமைப்பு பகுதிகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டனர். அப்போது ஒருசில வார்டுகளை தவிர மற்ற வார்டுகளை அடுத்த ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மறு சீரமைப்பு பணியில் இருந்த அதிகாரிகளை அப்பகுதி மக்களும் கட்சியினரும் முற்றுகையிட்டு வாக்குவதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று அப்பகுதி முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதேபோல் தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி பகுதிகளில் அதிகாரிகள் வார்டு மறு சீரமைப்பு செய்து வருவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Des : In the wake of the local elections, the people and the party have been besieged by the government officials,