¡Sorpréndeme!

என்ன சொன்னாலும் சரி! ரஜினியை விட விஜயகாந்த் தான் துணிச்சலான அரசியல்வாதி- வீடியோ

2018-01-03 18,469 Dailymotion

என்னதான் இருந்தாலும் விஜயகாந்த்துக்கு இருந்த தைரியம், தில், துணிச்சல், ரஜினிகாந்த்திடம் நிறையவே மிஸ் ஆகிறது. காரணம், விஜயகாந்த்தின் அரசியல் பாதையைப் பார்த்தால் அவரைப் போன்ற மிகத் துணிச்சலான புதுமுக அரசியல்வாதியை தமிழகம் பார்த்ததில்லை.

கருணாநிதிக்கு எதிராக எம்ஜிஆர் செய்த அரசியலை விட அபாரமான துணிச்சலுடன் கூடியது விஜயகாந்த் நடத்திய அரசியல். எல்லோருமே இதை ஒத்துக் கொள்வார்கள். காரணம், எம்ஜிஆர், கருணாநிதியை எதிர்த்து மட்டுமே அரசியல் செய்தார். ஆனால் விஜயகாந்த்தோ, ஜெயலலிதா - கருணாநிதி என இரு இமயங்களை எதிர்த்து முட்டி மோதியவர்.

இவர்களுடன் ஒப்பிடும்போது ரஜினிகாந்த்தை எந்த சீனிலுமே சேர்க்க முடியாது. விஜயகாந்த்தின் துணி்ச்சல், தைரியத்திற்கு முன்பு ரஜினி படு வீக்காகவே காட்சி தருகிறார்.

விஜயகாந்த் கட்சி தொடங்கியது முதல் அவருக்கு உடல் நலம் பாதித்து, தேர்தலில் பின்னடைவை சந்திக்கும் வரை அவரது செயல்பாடுகள் கிட்டத்தட்ட புயல் வேகத்தில்தான் இருந்தன. வருவேன் என்று சொன்னார். வந்தார். பெரும் சலசலப்புகளையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தினார். சாதித்தார். ஓய்ந்து போனார். இதுதான் விஜயகாந்த்.

When compared with Rajinikanth, DMDK president Vijayakanth is much better than the earlier. Vijayakanth has fought two Political top stars- Karunanidhi and Jayalalitha - in his time, but Rajini has entered into the field when both are not in the scene.