¡Sorpréndeme!

கொள்கையை பற்றி கேட்ட ஊடகங்களை கலாய்த்த ரஜினி

2017-12-31 2 Dailymotion

அரசியல்வாதிகளை விட ஊடகங்களை சமாளிப்பது குறித்து தான் இத்தனை நாட்களாக யோசிக்க வேண்டியதாக இருந்தது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார். தனிக்கட்சி ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து உள்ளார். இதன் மூலம் பல ஆண்டுகளாக நிலவி வந்த குழப்பத்திற்கு ரஜினி முற்றுப்புள்ளி வைத்து உள்ளார். ரஜினியின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

கடந்த 26ம் தேதி முதல் கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி ரசிகர்களை சந்தித்து வருகிறார். 31ம் தேதி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என்று ஏற்கனவே ரஜினி தெரிவித்து இருந்ததால், இன்று காலையில் இருந்தே அவரது ரசிகர்கள் உட்பட மக்களும் அவர் என்ன அறிவிப்பார் என்று உற்சாகத்துடன் காத்து இருந்தனர்.

இந்நிலையில்ரசிகர்களிடம் பேசிய ரஜினி, தான் அரசியலில் தனிக்கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும், அதன் மூலம் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்தார்.

Tamil Actor Rajini announced his Political Move today. Tamilnadu is witnessing very bad Political Administration and people need to change it Says Rajinikanth