தான் விரைவில் தனிக்கட்சி தொடங்கப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து உள்ளார். ரஜினியின் இந்த முடிவால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று 20 ஆண்டுகளுக்கு மேலான நிலவி வந்த குழப்பத்திற்கு இன்று தீர்வு கிடைத்துள்ளது. கடந்த ஆறு நாட்களாக கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்திவந்த ரஜினி, சந்திப்பின் கடைசி நாளான இன்று தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்து உள்ளார்.
தனக்கு பதவி ஆசை இல்லை என்றும், நாடு கெட்டுப்போய் உள்ளதால் தான் அரசியலுக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது என்றும் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார். இந்திய அளவில் தமிழக அரசியல் நிலையை பார்த்து மக்கள் சிரித்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போதும் இந்த முடிவை எடுக்காவிட்டால் என்னை வாழ வைத்த தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யமுடியாமல் போனதாக ஆகிவிடும், அதை நினைத்து காலம் முழுவதும் வருத்தப்படுவது போல ஆகிவிடும் அதை தவிர்க்க எனக்கு இதை தவிர வேறுவழியில்லை என்று ரஜினி குறிப்பிட்டு உள்ளார்.
Actor Rajinikanth Says His party will contest in Assembly Election. He also says that Truth and Hardwork is the Key Policies