விளம்பரத்தை பார்த்து உடல் எடையைக் குறைக்க ஆசைப்பட்டு ஏமாந்து போனதாக குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு புலம்பியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றைய ராஜ்ய சபா கூட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து போலி விளம்பரங்கள் மூலம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு போலி விளம்பரத்தை பார்த்து தான் ஏமாந்து போன அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
அதாவது வெங்கையா நாயுடு துணை ஜனாதிபதி பதவிக்கு வந்த பின் ஒரு நாள் விளம்பரம் ஒன்றை பார்த்தாராம். அதில் உடல் எடையை குறைக்கும் மாத்திரையை சாப்பிட்டால் உறுதியாக உடல் எடை குறையும் என கூறப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து ஸ்லிம்மாக ஆசைப்பட்ட வெங்கையா நாயுடு உடனடியாக அந்த நிறுவனத்தை தொடர்புகொண்டு மாத்திரைகள் குறித்து விசாரித்துள்ளார். அப்போது ஆயிரம் ரூபாய் செலுத்தினால் மாத்திரை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என கூறியதை தொடர்ந்து பணத்தை கட்டியுள்ளார் வெங்கையா நாயுடு.
Vice president Venkaih naidu says in Rajya sabha that he also fooled by fake advertisement. He urged to take severe action on the fake addverrtisements and the fake company.