¡Sorpréndeme!

சபாநாயகரிடம் வாக்குவாதம் செய்த டிடிவி தினகரன்- வீடியோ

2017-12-29 1,214 Dailymotion


ஆர் கே நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன் சபாநாயகர் தனபாலின் அறையில் எம்எல்ஏவாக பதவி ஏற்றுக் கொண்டார்.

நடைபெற்று முடிந்த ஆர் கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எப்போது தான் பதவிபிரமானம் செய்து கொள்ளலாம் என்று குடும்ப ஜோதிடரிடம் டிடிவி தினகரன் இரண்டு தினங்களுக்கு முன் கேட்ட போது இன்று வைகுண்ட ஏகாதசி என்றும் இன்று பிற்பகல் பதவி ஏற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று மதியம் தனது ஆதரவாளர்களுடன் சபாநாயகர் தனபாலின் அறைக்கு சென்ற டிடிவி தினகரன் தேர்தல் அதிகாரி வழங்கிய வெற்றி சான்றிதழை கொடுத்து முறைப்படி எம்எல்ஏ வாக பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்புக்கு முன்னர் சபாநாகர் தனபாலும் டிடிவி தினகரனும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது தனது அணியை சேர்ந்த எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது குறித்து பேசியுள்ளனர். பின்னர் தங்கள் அணியினரை அதிமுக பதவிகளில் இருந்து ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் விலக்கி வருவது தனபாலிடம் எப்படி அவர்கள் விலக்கலாம் என்று கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரம் தொடர்ந்த வாக்குவாதம் பின்னர் நிறைவு பெற்றுள்ளது. இறுதியில் தனபால் ஒபிஎஸ் இபிஎஸ் தரப்பினரிடையே இது குறித்து பேசுவதாக டிடிவி தினகரனிடம் கூறியுள்ளதாக தெரிகிறது.

Des : TTV Dinakaran, who contested independently from the by-election in RK Nagar constituency, took over as MLA in Dhanapal's room.