¡Sorpréndeme!

அரசுப்பேருந்து மோதியதில் பக்தர்கள் 6 பேர் பலி- வீடியோ

2017-12-26 1,206 Dailymotion

தாராபுரம் அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாயினர். ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். திருப்பூரைச் சேர்ந்த 40க்கும் அதிகமானோர், பழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். இன்று அதிகாலை அவர்கள் தாராபுரம் அருகே குப்பணன்கோவில் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே மதுரை நோக்கி அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து, அவர்கள் மீது மோதியது. இதில், 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலின்பேரில் வந்த தாராபுரம் போலீசார், உயிருக்கு போராடிய சாந்தி என்பவரை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பினர். அதிகாலை பனிமூட்டத்தில் எதிரே வந்தவர்கள் தெரியாமல் விபத்து நேரிட்டிருக்கக் கூடும் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தப்பி ஓடிய பேருந்தின் டிரைவர், கண்டக்டரை போலீசார் தேடி வருகின்றனர்.