¡Sorpréndeme!

குஜராத்தின் இளம் நாயகன் ஜிக்னேஷ்... யார் இந்த ஜிக்னேஷ் மேவாணி?- வீடியோ

2017-12-18 9,400 Dailymotion

குஜராத்தின் வட்காம் தொகுதியில் தனித்து போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி முக்கிய தலைவராக உருவெடுத்து இருக்கிறார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட இவர் பல்லாயிரம் வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார். மிகவும் இளம் வயது அரசியல்வாதியாக உருவெடுத்து இருக்கும் இவர் பாஜக கட்சிக்கு சிம்ம சொப்பனமாக இனி குஜராத்தில் இருப்பார் என்று கூறப்படுகிறது. இனி குஜராத்தில் எதிர்காலத்தில் நடக்க போகும் பல முக்கிய அரசியல் மாற்றங்களுக்கு இவரும் காரணமாக இருப்பார். இந்த தேர்தல்தான் இவருடைய முதல் தேர்தல் என்றாலும் மக்கள் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு அளித்து இருக்கின்றனர்.

தற்போது முக்கிய தலைவராக உருவாகி இருக்கும் இவர் 35 வயது மட்டுமே நிரம்பியவர். சட்டம் படித்த இவர் 2008ம் ஆண்டில் இருந்து தலித் மக்களின் உரிமைக்காக போராட்டங்கள் நடந்தி வருகிறார். டெல்லியில் ரோஹித் வெமுலா மரணம் அடைந்த போது இவர் நிறைய போராட்டங்கள் நடத்தினார். அந்த போராட்டத்தில் இருந்தே அரசியல் வெளிச்சம் இவர் மீது பட ஆரம்பித்தது.

Jignesh Kumar Mevani goes for big victory in Vadgam. He became the most important leader in Gujarat.