காங்கிரஸ் கட்சியின் தகவல்தொடர்பு மற்றும் சமூக வலைதளத்தின் பொறுப்பாக நியமிக்கப்பட்ட திவ்யா ஸ்பந்தனாவின் பணி குஜராத் மற்றும் ஹிமாச்சல் சட்டசபை தேர்தல்களில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.
குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேச சட்டசபைத் தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன.
இதில் காங்கிரஸ் கட்சியின் தகவல்தொடர்பு மற்றும் சமூக வலைதளத்தின் பொறுப்பாக நியமிக்கப்பட்ட திவ்யா ஸ்பந்தனா ஆற்றிய பணி பெரிதும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.
ராகுல் காந்திக்கு முன்னரே டிவிட்டரில் அக்கவுண்ட் தொடங்கியவர் இவர். ஆட்சி மாற்றம் மற்றும் அரசியலை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வக்கிக்கும் சமூக வலைதளங்களுக்கு காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாக அண்மையில் நியமிக்கப்பட்டார் திவ்யா ஸ்பந்தனா.இருகட்சிகளும் சமூக வலைதளங்களில்வளர்ச்சி என்ற ஸ்லோகத்தை முன்னிலைப்படுத்தின. பாஜக தனது வளர்ச்சி திட்டங்கள் குறித்து பெருமை பேசியது.ஆனால் வளர்ச்சியே இல்லை என்றது காங்கிரஸ். குறிப்பாக சமூக வலைதளங்களில் இதை பெரிதும் பயன்படுத்தினார் திவ்யா ஸ்பந்தனார்.
Divya spandana put much effort to establish Rahul gandhi in the Gujarat and Himachal assembly polls. Its reflecting it seems.