மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகள் படைத்த சாதனையை நெருங்கி விட்டது பாஜக. 1977ஆம் ஆண்டிலிருந்து 2011 ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 34 ஆண்டுகள் மேற்கு வங்காளத்தில் மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சி நடைபெற்று வந்தது. ஜோதிபாசு 23 வருடங்கள் தொடர்ந்து முதல்வராக பதவி வகித்து சாதனை படைத்தார்.
2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், இந்த சாதனையை தகர்த்தது. மம்தா 2016 சட்டசபை தேர்தலிலும் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளார். இந்த நிலையில், பாஜக குஜராத்தில் தொடர்ச்சியாக 22 வருடங்கள் ஆட்சியில் உள்ளது.
இன்றைய டிரெண்டை வைத்து பார்க்கும் போது மீண்டும் பாஜக குஜராத்தில் ஆட்சியை பிடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதன்படி மேலும் 5 வருடங்கள் பாஜகவால் ஆட்சியில் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே தொடர்ச்சியாக 27 வருடங்கள் ஆட்சியிலுள்ள கட்சி என்ற பெருமையை அது பெறும். சுதந்திர இந்தியாவில் மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்டுகள் செய்த சாதனையை நெருங்குகிறது பாஜக.
The BJP, which has been in power in the Gujarat state for 22 years, is projected to win the elections this time as well.