¡Sorpréndeme!

மாயவன் பட விமர்சனம்- வீடியோ

2017-12-15 235 Dailymotion

தமிழ் சினிமாவில் குறும்பட இயக்குநர்களை பெரிய பட இயக்குநர்கள் ஆக மாற்றியதில் முக்கிய பங்கு சிவி குமாருக்கு உண்டு. திட்டமிட்டு பட்ஜெட்டில் படம் எடுத்து லாபம் பார்ப்பதில் வல்லவரான சிவி குமாரின் முதல் இயக்குநர் முயற்சியை வெற்றி பெற வைத்தானா மாயவன்? பார்ப்போம்! சாகா வரம் பெற்று ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ ஆசைப்படும் ஒரு விஞ்ஞானியின் விபரீத முயற்சியைத் தடுக்கும் காவல்துறை அதிகாரியின் கதையே இந்த மாயவன். 2017 இல் ஒரு காட்சி, ஒரு விஞ்ஞானி உடலுக்கு மரியாதை செலுத்தும் ஜிம் ட்ரெய்னர், அந்த ஜிம் ட்ரெய்னர் ஒரு கொலை செய்துவிட அவனை துரத்தும்போது காயப்படும் போலீஸ் ஆபிசர் என்று படம் துவங்கும்போதே மர்ம முடிச்சுகளுடன் துவங்குகிறது. இந்த சம்பவங்களுக்கு இடையே இருக்கும் பிணைப்புதான் படம்.
முதலில் ஒரு துப்பறியும் கதைக்கு தேவையான திரைக்கதையை நேர்த்தியாக அமைத்திருக்கும் நலன் குமாரசாமிக்கு பாராட்டுக்கள். அடுத்தடுத்து நடக்கும் கொலைகளும் அவைகளுக்கிடையேயான முடிச்சும் அவற்றை அவிழ்க்கும் ட்விஸ்ட்களும் படத்தை சுவாரஸ்யமாக்குகிறது. இன்ஸ்பெக்டர் குமரனாக சந்தீப் கிஷன். தன்னுடைய ரோலுக்கான நியாயமான பங்களிப்பை தந்திருக்கிறார். ஆனால் போலீஸ் அதிகாரிக்கான கம்பீர குரல் மட்டும் மிஸ்ஸிங். சைக்யாட்ரிஸ்டாக லாவண்யா திரிபாதி. அழகு வரவு. நடிக்கவும் தெரிகிறது. வில்லன்களாக டேனியல் பாலாஜியும் ஜாக்கி ஷெராஃபும். முதல் பாதியை டேனியல் பாலாஜியும் இரண்டாம் பாதியை ஜாக்கி ஷெராஃபும் நிரப்புகிறார்கள். அதிலும் க்ளைமாக்ஸில் பிரமாதப்படுத்துகிறார் ஜாக்கி ஷெராஃப். என்ன கம்பீரம்!

Review of CV Kumar's maiden directorial Maayavan movie.