¡Sorpréndeme!

பேட்மின்டனில் தங்கப்பதக்கம் வென்ற நடிகர் அம்பானி சங்கர்!- வீடியோ

2017-12-11 2,269 Dailymotion

தமிழ் சினிமாவில் உயரம் குறைவான நடிகர்கள் பலர் நடித்திருக்கிறார்கள். அவர்களில் லேட்டஸ்டாக கலக்கிக் கொண்டிருப்பவர் அம்பானி சங்கர். 'ஜி', 'ஆறு', 'வல்லவன்', 'கருப்பசாமி குத்தகைதாரர்', 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்', 'குசேலன்', 'பட்டத்து யானை' உள்பட 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான பாரா பேட்மின்டன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
உயரம் குறைந்த நடிகரான சங்கர் தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். 'அம்பாசமுத்திரம் அம்பானி' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்ததால் அம்பானி சங்கர் என்று அழைக்கப்படுகிறார்.
அம்பானி சங்கர், மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்காக நடந்த மாநில பாரா பேட்மின்டன் போட்டியில் உயரம் குறைந்தவர்களுக்கான பிரிவில் கலந்து கொண்டு விளையாடி வந்தார்.
இதில் அவர் உயரம் குறைந்தவர்களுக்கான போட்டியில் அருண் சுயம்பு என்பவருடன் இணைந்து இரட்டையர் பிரிவில் விளையாடினார். நேற்று நடந்த இறுதிப்போட்டியில் அம்பானி சங்கர் அணி வெற்றி பெற்றது. இதில் அம்பானி சங்கருக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது.
உயரம் குறைந்தவர்களுக்கான பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார் அம்பானி சங்கர். வெற்றிக்குப் பிறகு அனைவருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்திருக்கிறார் அம்பானி சங்கர்.


In Tamil cinema, many actors have acted with the lower height. Ambani Shankar is the one who performs with them. He has acted in more than 25 films including 'Ji' 'Kuselan' and 'Pattathu Yaanai'. Ambani Shankar participated in the State level Para Badminton league in Madurai. In this, he won the gold medal in men double section.