¡Sorpréndeme!

பிரஷர் குக்கரால் பிரஷராகினர் எடப்பாடி, ஓ.பி.எஸ்- வீடியோ

2017-12-08 679 Dailymotion

ஆர்கே நகரில் தங்கள் அணிக்கு கூடாத கூட்டம் டிடிவி தினகரனுக்கு கூடியது எப்படி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் பெரும் கலக்கத்தில் உள்ளனர்

ஆர் கே நகரில் நேற்று அதிமுக சார்பில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர்

பிரச்சாரத்தின் போது வெள்ள வேட்டிகள் மட்டும் தான் சுற்றி காணப்பட்டது . வீதி வீதியாக வலம் வந்து பிரச்சாரம் செய்த அதிமுகவினரை அப்பகுதி மக்கள் வீடுகளின் வாசலிலும் மாடி மீது நின்று பார்த்தார்கள் சொல்லிக்கொள்ளும் படியான பெரிய வரவேற்பும் இல்லை

இதனிடையே நேற்று இரவு ஆர் கே நகர் தொகுதியில் சுயட்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்ட போது மக்கள் கூட்டம் அலைமோதியது . கட்சி தொண்டர்கள் குறைவாக இருந்த போதும் மக்கள் ஆதரவு அங்கு அதிகமாக இருந்தது .அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுப்பதும் வரவேற்பதும் தூள் கிளப்ப தங்கள் அணிக்கு கூடாத கூட்டம் டிடிவி தினகரனுக்கு கூடியது எப்படி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் பெரும் கலக்கத்தில் உள்ளனர் ..பிரச்சாரத்தில் பேசிய தினகரன் தனக்கு பிரஷர் குக்கர் சின்னம் கொடுத்தது ஒரு வகையில் நல்லது தான் என்றும் EPS-OPSக்கு அதிக பிரஷர் கொடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார் .அதற்கேற்ப EPS-OPSம் பிரஷர் ஏறித்தான் உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்

Des : Chief Minister Edappadi Palanicasamy and deputy chief minister Panneerselvam are very worried about how DTV Dinakaran can not meet their team in the city of Arke.