இணைய சமநிலை குறித்த டிராய் (தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) அமைப்பின் பரிந்துரைகள் போட்டியாளர்களுக்கு ஏமாற்று வேலைகளுக்கு, செக் வைப்பதாக அமைந்துள்ளன. இதுகுறித்து, இந்திய இணையம் மற்றும் மொபைல் அமைப்பின் (Internet & Mobile Association of India(IAMAI)) அமைப்பின் தலைவர் சுபோ ராய் கூறியுள்ளதாவது: நீங்கள் எப்போதாவது உணர்ந்துள்ளீர்களா, நீங்கள் விரும்பும் டிவி சேனலுக்கு பதிலாக வேறு சேனலைத்தான் உங்கள் ஸ்மார்ட் போன் இணைய இணைப்பில் இருந்து ஓபன் செய்ய முடிகிறது என்பதை?
நீங்கள் கவனித்துள்ளீர்களா, புதிதாக தொடங்கப்பட்ட ஒரு ஆன்லைன் வணிக நிறுவன வெப்சைட்டை திறக்க முற்படும்போது, மற்றொரு முன்னணி வெப்சைட்டைதான் ஓபன் செய்ய முடிகிறது என்பதை? இதுதான் இணைய சமன் இல்லாத நிலை எனக்கூறப்படுவது.
நீங்கள் இணையதளத்திற்கான கட்டணத்தை செலுத்தியுள்ளீர்கள். நீங்கள் விரும்புவதை பார்க்க நீங்கள் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அது இணைய சமநிலை ஆங்கிலத்தில், 'Net Neutrality'. இணையம் என்பது பொதுவானது. இது வீடுகளுக்கு வழங்கப்படும் குழாய் இணைப்பு போன்றது இல்லை.