¡Sorpréndeme!

திருப்பதி பயணம் திரும்பா பயணமானது எப்படி? : மணப்பாறை கோர விபத்தின் பின்னணி- வீடியோ

2017-12-07 2,824 Dailymotion

நாகர்கோவிலில் இருந்து திருப்பதிக்கு சுற்றுலா சென்றவர்கள் திருச்சி அருகே விபத்தில் சிக்கியது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது. வெளிச்சம் குறைவு, வேன் டிரைவரின் வேகமே 10 பேர் மரணத்திற்கு காரணமாகியுள்ளது. மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் 4 ஆண்கள், 2 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். நாகர்கோவில் தெற்கு குளத்தை சேர்ந்தவர் வைத்திலிங்கம்,79. இவர் உறவினர்கள் மற்றும் குடும்பத்துடன் டெம்போ வேனில் நேற்று திருப்திக்கு புறப்பட்டார். டெம்போ வேனில் டிவைர் உள்பட 15 பேர் இருந்தனர்.

வேன் நேற்றிரவு 11.30 மணியளவில் மதுரையை கடந்து திருச்சி நோக்கி வேன் சென்று கொண்டிருந்தது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி ஊருக்குள் செல்லும் சர்வீஸ் ரோட்டில் வேன் சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த போர்வெல் லாரி மீது வேன் பயங்கரமாக மோதியது. இதில் வேனில் இருந்த வைத்திலிங்கம் உள்பட 4 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் ஒரு பெண் குழந்தை ஆகிய 9 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
இதுபற்றி தகவலறிந்ததும் துவரங்குறிச்சி போலீசார் மற்றும் தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேனில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஒருமணி நேர போராட்டத்திற்குப் பின்னர் 6 பேரை படுகாயங்களுடன் மீட்டனர்.