¡Sorpréndeme!

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு.. போன வருஷம் இதே நாளில்.. அல்லோகல்லப்பட்ட தமிழகம்!- வீடியோ

2017-12-04 1,481 Dailymotion


ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்த நாள் இன்று. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அப்பல்லோ மருத்துவர்கள் குழு, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, சிங்கப்பூர் மருத்துவர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு சிகிச்சையளித்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெயலலிதா தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.மேலும் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்துவிட்டார்.

விரும்பும்போது ஜெயலலிதா வீடு திரும்புவார் என அப்பல்லோ நிர்வாகத் தலைவர் பிரதாப் ரெட்டி கூறினார். ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் நலமாக உள்ளார் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுவதாக அதிமுக செய்தி தொடர்பாளர்கள் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்தனர்
கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி ஜெயலலிதா முழு குணமடைந்துவிட்டார். அவர் விரைவில் வீடு திரும்புவார் என கூறியது எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு.

Appolo hospital said on last year on December 4th Evening that Jayalalitha suffered i cardiac arrest. She was monitoring by the team of experts including cardiologists, critical care specialists. Governor also visited the hospital at mid night.