¡Sorpréndeme!

ஆர்.கே.நகர்: மதுசூதனனுக்கு சீட் இல்லைன்னா எனக்குதான்... அடம்பிடிக்கும் கே.பி. முனுசாமி!- வீடியோ

2017-11-29 6,142 Dailymotion

ஆர்.கே.நகர் தொகுதியில் மதுசூதனனுக்கு சீட் மறுக்கப்பட்டால் தமக்குத்தான் தர வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறாராம். அதிமுக அணிகள் இணைந்துவிட்டதாக அறிவித்தாலும் அக்கப்போருக்கு அளவில்லை என்பதை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அம்பலப்படுத்திவிட்டது. ஆர்.கே. நகர் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில் அதிமுக கோஷ்டிகள் அடித்துக் கொண்டிருக்கின்றன.

இரட்டை இலை கிடைத்துவிட்ட கோதாவில் எப்படியும் இன்னொரு ரவுண்டு வலம் வரலாம் என 80 வயதிலும் துடியாய் துடிக்கிறார் மதுசூதனன். நிச்சயம் ஓபிஎஸ் நம்மை கைவிடமாட்டார் என தளராத நம்பிக்கையுடன் இருக்கிறார் மதுசூதனன்.
ஆனால் மதுசூதனன் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்து அமைச்சர் பதவி கட்டாயம் கொடுக்க நேரிடும்; இது தமது இருப்புக்கே உலை வைப்பதாகிவிடும் என்பதால்தான் அமைச்சர் ஜெயக்குமார் மிகக் கடுமையாக எதிர்க்கிறார். இதை உணர்ந்த ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.பி. முனுசாமி தமக்கு சீட் கேட்டு வருகிறார்.

Ex Minister KP Munusamy also lobbying for the RK Nagar By-Poll candidature, sources said.