அகிலா அசோகன் என்கிற ஹாதியா வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு வந்துள்ளது. பிறப்பால் இந்துவான அகிலா தன் தோழிகளின் இஸ்லாமிய கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு தான் இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாக சொல்கிறார். 2016- ஷாபின் ஜகான் என்ற மனிதரை திருமணம் செய்துள்ளார். அகிலாவின் பெற்றோர் தங்கள் மகளைக் காணவில்லை என்று கோர்ட்டில் மனு செய்துள்ளனர். அத்துடன், அகிலாவின் தந்தை கூறுகிறார் , "என் மகள் சிரியாவிற்கு சென்று ஆடு வளர்ப்பதாக கூறினாள். இதை எந்த தகப்பனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது".
இதை பற்றி நம்மால் ஒன்றும் கூற இயலாது. இதே போன்ற மற்றோரு நிகழ்வு நாம் கவனிக்க வேண்டியது. என்னவெனில், சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு , ஓய்வு பெற்ற பேராசிரியர் காமராஜும் அவரது மனைவியும் தங்களது மகள்கள் தலை மொட்டை அடிக்கப்பட்டு அவர்களை சந்நியாசி ஆக்கிவிட்டதாகவும், ஈஷா யோகா மையத்தின் மீது புகார் அளித்து, அவர்களை காப்பாற்றுவதற்காக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு ஒரு மனுவை தாக்கல் செய்தனர்.
சத்யபாமா பல்கலை கழகத்தில், மோனிகா என்ற மாணவி, தான் செய்த செயலால் மனம் உடைந்து செய்த தற்கொலை. 11ம் வகுப்பு மாணவிகள் மனிஷா, சங்கரி, தீபா மற்றும் ரேவதி கிணற்றில் விழுந்து தற்கொலை.
காதல் தவறென்று கூறவில்லை. ஆனால் பெற்றோரையும் வெறுக்கும் அளவுக்கு எங்கே சென்றது உங்கள் மனம்? துறவறம் நல்லது. ஆனால், உங்கள் பெற்றோர்களை தவிக்க வைத்து விட்டு கல்லாகி விட்டதா உங்கள் மனம்? காப்பி தவறென்று நினைத்த உங்கள் மனது தற்கொலை ஒன்று தான் தீர்வு என்று நினைத்ததா? பெற்றோரை அழைத்து வர சொன்னதற்கே உங்களை மாய்த்துக்கொள்ள தூண்டியதா உங்கள் மனம்?
Parents should monitor their kids even after they are grown, till some stage. Today's children are vulnerable to sensational decisions, observes writer Tanishshree from Chennai.