தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர் ஜி.வி. குமார் தொடர்ச்சியாக வித்தியாசமான படங்களை தயாரித்து வரும் இவர் பைனான்சியர் அன்பு செழியனிடம் கடன் வாங்கியிருந்தார். இவர் தயாரித்த படங்கள் தொடர் தோல்வி படங்களாக பாக்ஸ் ஆபீசில் முடங்கியது. இதனால் வாங்கிய கடனுக்கு வட்டியும் கொடுக்க முடியவில்லை. அசல் எப்படி இவரால் நமக்கு கொடுக்க முடியும் என்று எண்ணிய அன்பு செழியன் தன் கறார் முகத்தை காட்டத் தொடங்கினார். இதற்கிடையே மாயமான் என்கிற சைன்ஸ் பிக்சன் படமொன்றை ஞானவேல்ராஜா, அபி அபி ஆகியோருடன் இணைந்து தயாரிக்க தொடங்கினார். ஷாக்கி ஷெராப், சந்தீப் கிருஷ்ணா, லாவண்யா, டேனியல் பாலாஜி, ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை G.V.குமார் இயக்கினார். 1.9.2017 அன்று ரீலீஸ் ஆன மாயமான் திரைக்கு வருவதற்கு முன் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். தனது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட படங்களுக்கு மட்டுமே G.V.குமார் அன்பு செழியன் வசம் கடன் வாங்கியிருந்தார். மூன்று பேர் இணைந்து தயாரித்த மாயமான் படத்துக்கு அன்பு செழியன் கடன் கொடுக்கவில்லை. அதனால் படம் எந்த பிரச்சினையும் இன்றி வெளியாகும் என்ற குமாரின் நம்பிக்கையை அன்பு நமுத்துப்போக செய்தார். படத்தை விநியோக அடிப்படையில் வியாபாரம் செய்து விட்டாலும் விநியோகஸ்தர்கள் தியேட்டர்களை ஒப்பந்தம் செய்ய முடியவில்லை.. அன்பு செழியன் தன் விசுவாசிகள் அங்கம் வகிக்கும் திரைப்பட கூட்டமைப்பு மூலம் தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்ய முடியாத அளவிற்கு நெருக்கடி கொடுத்தார்
Sources say that Delhi National party threatened financier Anbu Chezhiyan on behalf of a producer.