¡Sorpréndeme!

அஜித்தின் 58-வது படம் டைட்டில், விடாமல் துரத்தும் சென்டிமென்ட்!- வீடியோ

2017-11-23 1 Dailymotion

'விவேகம்' படத்தைத் தொடர்ந்து 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித் தன்னுடைய 58-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் எப்போது தொடங்கும், யார் யார் நடிக்கின்றனர் என்ற விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் அஜித்தின் 58-வது படத்தின் பெயர் 'விசுவாசம்' என்று வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதோடு படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்குகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில் ஷூட்டிங் தொடங்கும் 'விசுவாசம்' திரைப்படம் 2018 தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் எனும் தகவலை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சாய் சித்தார்த் வெளியிட்டுள்ளார். 'வீரம்' படத்தில் அஜித்துடன் இணைந்த சிவா, நான்காவது முறையாக அஜித் படத்தை இயக்க இருக்கிறார். சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான விவேகம் படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 'விசுவாசம்' பட டைட்டிலின் மூலம் அஜித்தின் முந்தைய படங்களுக்கு இடையேயான ஒற்றுமை இன்னும் தொடர்கிறது. சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெற்றிப் படமான 'வீரம்' 'V' ஆங்கில எழுத்தில் தொடங்குவதுதான்.

Ajith's 58th movie will be directed by Siva. Ajith's 58th film is titled 'Viswasam'. The director of the Sathyajyothi Films company Sai Siddharth has published this information on Twitter. Ajith's 58th film is titled 'Viswasam' will be directed by Siva. Sathya jyothi Films company producing this film. 'V' sentiment continues for Ajith and siva combo.