நடிகை நமீதாவுக்கு வரும் 24-ம் தேதி வீரேந்திர சௌத்ரி என்பவருடன் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், திருமணத்திற்கு முந்தைய மெஹந்தி சடங்கு நடைபெற்றது. 'மச்சான்ஸ்...' எனக் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி தமிழ் ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற நடிகை நமீதாவுக்கு கடந்த சில வருடங்களாக சினிமாவில் சரியான வாய்ப்புகள் இல்லை. கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி தமிழில் பல படங்களில் நடித்த குஜராத்தைச் சேர்ந்த நமீதா, 'எங்கள் அண்ணா', 'ஏய்', 'பில்லா', 'அழகிய தமிழ்மகன்' உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் தனக்கும் வீரேந்திர சௌத்ரி என்பவருக்கும் வரும் நவம்பர் 24-ம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக ஒரு வீடியோ மூலம் அறிவித்திருந்தார். இந்நிலையில் இவர்களது திருமணப் பத்திரிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. திருப்பதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று மாலை வரவேற்பும், நவம்பர் 24-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை இஸ்கான் கோவிலில் திருமணமும் நடைபெற இருக்கிறது. குஜராத்தைச் சேர்ந்த நமீதாவின் குடும்ப சம்பிரதாயப்படி திருமணத்துக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பு மெஹந்தி எனும் சடங்கு நடத்தப்படும். அதன்படி நமீதா மெஹந்தி போட்டுக்கொண்டார். இன்று மாலை இவர்களது திருமண வரவேற்பு திருப்பதியில் நடைபெறுகிறது.
Actress Namitha is going to marry Virandra Choudhary on November 24th. According to Namitha's family tradition 'Mehandi' function was held. The bride Namitha participated happily in this. At this stage, their wedding reception party will be held in Tirupati this evening.