¡Sorpréndeme!

பிரபல டிவி சீரியல் நடிகை புற்றுநோயால் மரணம்: திரையுலகம் இரங்கல்- வீடியோ

2017-11-20 3,838 Dailymotion

பிரபல தொலைக்காட்சி நடிகை ரீட்டா கொய்ரல் புற்றுநோயால் மரணம் அடைந்துள்ளார். பெங்காலி படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் ரீட்டா கொய்ரல்(58). பெரும்பாலும் வில்லியாகவே நடிப்பார். அபர்னா சென், ரித்துபர்னோ கோஷ், அஞ்சன் தத்தா உள்ளிட்ட பிரபல இயக்குனர்களின் படங்களில் நடித்துள்ளார். போரோ போ, குண்டா, ஜிபன் நியே கேலா, சிரோதினி துமி ஜே அமர் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். ரீட்டாவுக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 3 மாதமாக புற்றுநோயுடன் போராடிய ரீட்டா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். ராக்கி பந்தன், ஸ்த்ரீ ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் ரீட்டா நடித்து வந்தார். இது தவிர அவர் மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். பெங்காலி ரசிகர்களிடையே பிரபலமாக இருந்தவர்.