¡Sorpréndeme!

நயன்தாரா... வில் பவரை விட்டுக்கொடுக்காத வித்தகி! - வீடியோ

2017-11-18 1,216 Dailymotion

அறம் படத்தில் ஒரு காட்சி... போர்வெல்லில் விழுந்து போராடிக்கொண்டிருக்கும் குழந்தையை எவ்வளவு நேரத்துக்குள் காப்பாற்ற வேண்டும்...? என்று ஆட்சியராக இருக்கும் நயன்தாரா கேட்க, அதிகாரி, "குழந்தைக்கு வில்பவர் நல்லாருக்கு. நல்லா தைரியமா முழிச்சு பார்த்துட்டு இருக்கா... அதனால இன்னும் ஆறுலேர்ந்து ஏழு மணி நேரம் தாக்குப் பிடிப்பா..," என்பார். முதலில் 36 அடியில் இருந்து மீண்டு மேலே வரும் நிலையில் கை பிடி நழுவி மீண்டும் அதல பாதாளத்துக்கே சென்று 96 அடியில் இருக்கும்போதும் வில் பவரை விட்டுக்கொடுக்காத அந்த குழந்தையின் திடத்தை இன்னும் ஒருவரிடம் நாம் பார்க்கலாம். அது நயன்தாரா...! நயன்தாராவைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாவற்றையும் படித்துவிட்டு கடைசியில் ஓவரா இருக்கு என்று நீங்கள் கமெண்ட் போடலாம். ஆனால் சொல்வதைத் தாண்டியும் சாதித்திருக்கிறார், சாதித்துக் காட்டிக்கொண்டிருக்கிறார்.

Actress Nayanthara's core strength is her will power and professionalism.