¡Sorpréndeme!

பத்மாவதி இந்தி படத்துக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு?- வீடியோ

2017-11-18 2 Dailymotion

தமிழில் மும்பை படம் ரீலீஸ் ஆன போது இயக்குநர் மணிரத்னம் என்ன பிரச்சினையை எதிர்கொண்டாரோ, விஸ்வரூபம் பட வெளியீட்டில் கமல் என்னென்ன பிரச்சினைகளைச் சந்தித்தாரோ அவற்றிலிருந்து வேறுபட்டது பத்மாவதி படத்துக்கு வந்துள்ள பிரச்சினை. பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் மற்றும் பலர் நடித்துள்ள இந்தி திரைப்படமான 'பத்மாவதி' வெளிவருவதற்கு முன்பே கடுமையான எதிர்ப்பு ஏன்? பத்மாவதியின் கணவராக ஷாகித் கபூர் இந்த படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் வெளியாவதைத் தடை செய்ய வேண்டும் என்று ராஜபுத்திரர்களின் அமைப்புகள் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தளவு எதிர்ப்பிற்கு என்ன தான் காரணம், பத்மாவதி எனும் மகாராணிக்கு வரலாறு எதுவும் உண்டா? மாலிக் முகமது ஜெயசி எனும் இஸ்லாமிய கவிஞர் வட இந்தியாவில் பேசப்படும், 'அவதி (Awadhi)' மொழியில், 16-ஆம் நூற்றாண்டில் எழுதிய 'பத்மாவத் (Patmavat)' எனும் கவிதை தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு கற்பனை கலந்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Why Rajputs from North India have turned against Padmavati movie? Here are the reasons