¡Sorpréndeme!

சர்ச்சையை கிளப்பியிருக்கும் 'லக்ஷ்மி' குறும்படம்- வீடியோ

2017-11-10 8 Dailymotion

சர்ஜுன் இயக்கத்தில் வெளியான 'லக்ஷ்மி' குறும்படம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் குறும்படம் கௌதம் வாசுதேவ் மேனனின் 'ஒன்றாக என்டர்டெயின்மென்ட்' யூ-ட்யூப் சேனலில் வெளியாகியுள்ளது. Loading ad மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சர்ஜுன் இயக்கிய இந்தப் படத்தில் லக்ஷ்மி ப்ரியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சமூக வலைதளங்களில் இந்தப் படத்தின் மீதான விமர்சனங்களால் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. பெண் சுதந்திரம் பற்றிப் பேசுவதாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் அபத்தமான காட்சிகள் இருப்பதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.பாரதியாரின் வரிகள் இந்தக் குறும்படத்தில் முக்கியமான கருத்துப் பதிவுக்காகப் பாடலாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்தக் குறும்படத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட பல மீம்களும் உலவி வருகின்றன.

The 'Lakshmi' short film directed by Sarjun KM has created a huge debate on social networks. Gautham Menon's ' Ondraga Entertainment' channel is released this short film on YouTube.