¡Sorpréndeme!

29 வருடத்திற்கு பிறகு திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற போகும் டி20- வீடியோ

2017-11-06 3,785 Dailymotion

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற இருக்கும் மூன்றாவது டி20 போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் 29 வருடங்களுக்கு சர்வதேச போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கின்றது, இந்த நிலையில் கேரளத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக மலை பெய்து வருவதால் நாளைய போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் நியூசிலாந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நாளை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் நடக்கிறது.

india vs nz thiruvananthapuram ready as international cricket returns after 29 years