¡Sorpréndeme!

இரண்டு நாட்களில் 40 செ.மீட்டர் மழைக்கு வாய்ப்பு- வீடியோ

2017-11-02 1,437 Dailymotion

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இரண்டு நாட்களில் 40 சென்டிமீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்சி மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதால் தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை நகரில் மழை கடந்த இரு தினங்களாக பெய்து வரும் மழையால் புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியதால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர். கடலோர மாவட்டங்களான கடலூர், நாகை, பாண்டி, புதுவை, ராம்நாடு உள்ளிட்ட மாவட்டகளில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் உள்ள பள்ளி கட்டிடம் ஒன்று மழையினால் சேதமடைந்து இடிந்துள்ளது. மழையினால் இது வரை தமிழகத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.