கேப்டன் விராட் கோஹ்லி, முன்னாள் கேப்டன் டோணியின் வெற்றி சாதனைகளை அப்படியே பின்பற்றுவதோடு, இன்னும் மெருகேற்றியுமுள்ளார். 10 வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய அணியை பார்த்து உலக கிரிக்கெட் அணிகள் அஞ்சி, நடுங்கியதை போலவே இப்போது இந்திய அணியை பார்த்தும் நடுங்குகின்றன. பெயருக்கு சில ஓவர்களை வீசுவார்கள் என்ற பேச்சை தவிடுபொடியாக்கி இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளனர்.
கடைசி கட்ட ஓவர்களில் சொதப்புவது இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வழக்கம் என்பதால், கும்ப்ளே அல்லது ஹர்பஜன் சிங்கை வைத்து கடைசி ஓவர்களை வீச வைத்த கங்குலி அணி இப்போது இல்லை.
India have not lost an ODI series since Australia thrashed them 4-1 in 2016. Their last series defeat in ODIs at home was in 2015 when South Africa beat them 3-2.