பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு ஜூலிக்கு நல்ல பெயர் இருந்தது. ஜல்லிக்கட்டுக்காக போராடிய பொண்ணு என்று பாராட்டியவர்களே இன்று ஜூலியை போலி என்று திட்டுகிறார்கள். ஒரு வயது குழந்தை ககனுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு ரூ.20 லட்சம் தேவைப்படுகிறது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ககன் வீட்டாரால் இதை சமாளிக்க முடியவில்லை. தயாள குணம் உள்ளவர்கள் தயவு செய்து உதவுங்கள் என்று வீடியோ மூலம் கேட்டுள்ளார் ஜூலி. ஜூலி உதவி கேட்டு வெளியிட்டுள்ள வீடியோ லிங்கை ட்வீட்டி குழந்தைக்கு நம்மால் முடிந்த உதவியை செய்வோம் என்று தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.
Former Bigg Boss contestants Juliana and Gayathri have requested the kind hearted to save the life of a one-year-old kid Gagan.