¡Sorpréndeme!

டெல்லியிலிருந்து வந்த "சிக்னல்".. சிக்கலில் எடப்பாடி அரசு-வீடியோ

2017-10-26 25,221 Dailymotion

டெல்லியில் இருந்து தமிழகத்துக்கு தெரிவிக்கப்பட்டிருக்கும் அடுத்தடுத்த சமிக்ஞைகளால் ஆட்சி கவிழும் அபாயத்தில் இருப்பதாக் கோட்டை வட்டாரங்களில் பரபரப்பு கிளம்பியுள்ளது . தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் இருந்தபோது தான் முதல்வர் எடப்பாடிக்கான ஆதரவை 21 அதிமுக எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றனர். ஆனால் இதன் மீது எந்த ஒரு நடவடிக்கையுமே வித்யாசாகர் ராவ் எடுக்கவில்லை .

தற்போது இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. வித்யாசாகர் ராவைத் தொடர்ந்து புதிய ஆளுநராக பன்வாரிலால் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடமும் டெல்லி எந்த ஒரு முடிவும் எடுக்க வேண்டாம் என கூறியே அனுப்பி வைத்திருந்தது.

According to the sources After the Delhi's Signal, Edappadi lead Govt will fall very soon.